கண்ணாடி

கண்ணாடி
==============================================ருத்ரா


கண்ணாடியில் என்ன பார்க்கிறாய்?
உன் பிம்பத்தையா?
அந்த கண்களையே உற்றுப்பார்
அதன் வழியே
அவள் கண்களின் கருவிழிக்குள்ளும்
புகுந்து கொண்டாயே!
கண்ணாடி மறைந்து போய்விட்டது.
இரண்டு ஜோடிக்கருவண்டுகள்
யாழ் மீட்டி சுருதி கூட்டி
சுற்றுச்சுழலை
ஒரு சோலையாக்கி விட்டது.
அங்கே என்ன நடக்கிறது?
மேகப்பிழம்புக்குள் இருவரும்
உலா வந்து ஊடுருவி
திளைத்துக்களிக்கிறார்கள்.

"எனக்கு அந்தப்பூ வேண்டும்."
அவள் கேட்டு விட்டாளே
நான் ஏதாவது செய்ய வேண்டுமே.
பாய்ந்து விட்டேன்.
"படீர்"
கண்ணாடி நொறுங்கிக்கிடக்கிறது.
நானும் தான்!
"ஏண்டா...கண்ணாடியில் போய்
ஜல்லிக்கட்டு விளையாட்டா?"
எங்க அப்பாவும்
கொம்பு கொண்டு குத்தும்
ஒரு காளைபோல்
கோபத்துடன்
என் மீது பாய்ந்தார்.

==============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (13-Jan-19, 5:51 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kannadi
பார்வை : 389

மேலே