உன் பேச்சு கா
அண்ணானு கூப்பிட்ட
உடனே
இன்னானு கேட்டு
அன்பு
முத்தம் நான்
கொடுக்க
மென் சினுங்களோடு
உன் பேச்சு
"கா" னு
அவ சொல்லிட்டானு
நீ சொல்ல
நீ சொன்ன
குற்றச்சாட்டு
என்னை சிரிக்க
தூண்ட
அதை மறைத்து
நான் இருக்கேன்டா
செல்லம்னு
சொன்ன நேரம்
அந்த நொடியில்
உன் நம்பிக்கை
பதில் முத்தமாய்
திரும்பிவர
அந்த நொடியில்
உடன் பிறந்த
நேசம்
உலகை கூட
வெல்ல துடித்தது
உனக்காக!