தமிழர் திருநாள்
விவசாயத்தின் திருநாள்
விலைமதிப்பில்லா பெருநாள்
விதைத்த விதைகளை
அறுவடைச் செய்யும்
விளைநாள்!
நம்
ஆடம்பரத்தின் பரப்பினை
நாம்
ஆடம்பரமாக உயர்த்திட
தனக்கு
கிடைத்த நிலத்தில் உழுது
நம்
அடிப்படை தேவையினை
பூர்த்தி செய்தும்
எலிக்கறி தின்னும்
அவலம்!
உறுதி பூணுவோம்
இத்தைத்திருநாளில்
அவர்கள் வாழ்வும்
மகிழ்ச்சியில் பொங்கி
நினைத்ததை இத் தை
நிகழ்த்திட!
தமிழர் திருநாளில்
பாரினில் இருக்கை
அமைக்கும் முன்
நம் இல்லந்தோரும்
தமிழ் இருக்கை
ஒன்றினையும் பிள்ளைகள்
மத்தியில் அமைத்திடுவோம்!
இனிய தமிழர் மற்றும்
விவசாய திருநாள்
வாழ்த்துக்கள்!