சகலத்தையும் பணத்திற்காக

உழைத்தவன் உய்ய ஒரு வழிக்கோடு
அதற்கு வழிகோலியதே இடஒத்துகீடு
உடலால் உழைப்பவன் மூளை - எந்நாளும்
உழைப்பால் கிடைக்கும் உயர்வை மட்டுமே நாடும்
சட்டத்தால் வகுத்த சாதுரியத்தை அறிந்ததல்ல,

சால உழைக்கும் சாமானியனின் சாதாரண புத்தி
ஏர் எடுத்துச் சென்று சேறு மிதித்து உண் - என
தான் இருக்கும் சூழலில் வாழ்பவனுக்கும்,

உழுபவனோடு அழகுறு நண்பனாய் இணைந்து
உழைத்து இத்தரணி தனை உயர்த்து என வாழும்
தனி கொள்கையுடைய தவ சிறந்த தொழிலாளிக்கு
தெரிவதில்லை தனி மூளைக் கொண்ட - இத்
தரணியாளோரின் சால சிறந்த சாதுர்யம்
தனல் போல் தாக்கி புனல் போல் அழிக்கும் என்று,

இருந்தாலும் சமமில்லை இந்நாட்டில்
மூளைக்காரனின் மூன்று வேளை உணவின் விலை
உடல் உழைப்பவனின் முப்பது நாள் உணவிற்கு,

எனினும் நாட்டில் சட்டத்தை படைக்கும் வல்லமை
சகலத்தையும் பணத்திற்காக துறப்பவருக்கும்
சகதி போன்ற எண்ணத்தைக் கொண்டுள்ள - அந்நாளில் இந்நாட்டிற்கு அகதியாய் வந்தவர்களாலே,

மேன்மை வேண்டின்எண்ணத்தில் ஆண்மை வேண்டும்
ஆண்மை வேண்டின் உலகத்தை ஆராய வேண்டும்
ஆராய்தல் என்பதே நம்மின் பேராய்தம் அதனால்
சாதாரணமாக இவ்வுலகை மாற்றம் காண செய்யலாம்.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (14-Jan-19, 11:38 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 359

மேலே