மது கொண்டாட்டம்

மது உடலுக்கு எந்த வகையில் எல்லாம் தீமை தர கூடியது என்பது அனைவருக்குமே தெரியும் என்பதால், மனதுக்கு எந்த வகையில் தீங்கிழைக்க கூடியது என்பதை மட்டும் பார்க்கலாம்.

போதை என்பது ஒரு பசியை போன்றது . ஒருமுறையுடன் அது தீர்ந்து விடாது . எப்போதாவது ஒரு முறை என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் , காலப்போக்கில் வாரம் ஒருமுறையாகி , பின்னர் தினசரி குடிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிடும் . மனம் , அந்த போதைக்கு அடிமையாகிவிடுவதே இதற்கு காரணம் உடனடியாக உடல் பாதிப்பு எதுவும் இருக்காது என்பதால் , மதுவை ஒரு நச்சு பொருள் என்று யாரும் நம்பவே மாட்டார்கள் .புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் மற்றும் மது குடிக்காமல் இருப்பவர்களை எப்படியாவது குடிக்க வைத்து மதுவுக்கு அடிமையாக்குவதில் இவர்கள் அலாதி இன்பம் காண்பார்கள் .

நினைத்தால் எந்த நேரமும் குடியை விடமுடியும் என்று ஒரு தவறான நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்குவார்கள் .

குடித்தால்தான் மூளை ஷார்ப்பாக வேலை பார்க்கும் என்று தவறாக நினைத்துக்கொண்டு தினமும் குடிப்பார்கள். மது உடலில் இல்லை என்றால் , செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனததில் இருக்கும் விஷயத்தை எல்லாம் புலம்பும் நிலைக்கு வந்துவிடுவார்கள்.

மதுவின் போதைக்கு ஆளானவர்கள் தங்களின் செயல்திறன் குறைவதை நம்பமாட்டார்கள் . யார் சொல்வதையும் கேட்கமாட்டார்கள் . சரியான சமயத்தில் அவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்காவிட்டால் , மீள முடியாத அளவுக்கு மதுவுக்கு அடிமையாகி விடுவார்கள் .


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

SHARE Facebook Twitter

எழுதியவர் : (14-Jan-19, 6:06 pm)
Tanglish : mathu kondaattam
பார்வை : 47

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே