இதய நோய்க்கான உயிரைக்கொல்லும் காரணங்கள்

கரோனரி இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு படியக் காரணமாயிருப்பதும் அந்தப் படிவுகளை அதிகப்படுத்துவதற்கு காரணமாயிருப்பவை ஆபத்தை விளைவிக்கும் காரணிகளேயாகும். கரோனரி இரத்தக் குழாய் நோய் தோன்றக் காரணமாயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் காரணிகளின் எண்ணிக்கையை ஒருவர் அறிய விரும்பினால் அவை நூற்றுக்கணக்கில் வரும்.

இதய நோயை வளர்க்கும் மிகவும் முக்கியமான உயிர்க் கொல்லிக் காரணிகள் 10 அல்லது 15 ஐ எடுத்துக் கொள்வோம். அவை இரண்டு வகைப்படும்:
1. மாற்றிவிடக்கூடிய உயிர்கொல்லிக் காரணங்கள்:
மாற்றிவிடக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய உயிர்கொல்லிக் காரணிகள் இதில் அடங்கும். அவற்றை நீக்கிவிட்டால் இதய நோய் வராமல் நிறுத்தி விடமுடியும்.
2. மாற்ற இயலாத உயிர்கொல்லிக் காரணங்கள்:
வயது, ஆண் அல்லது பெண் ஆகிய பாலினம் மற்றும் பரம்பரை ஆகிய மாற்ற முடியாதவை இதில் அடங்கும்.

மாற்றிவிடக்கூடிய உயிர்கொல்லிக் காரணங்கள்:
அ. மனஇறுக்கமும், மனஉளைச்சலும்
ஆ. இரத்தத்திலுள்ள அதிகப்படியான கொலட்ரால்
இ. இரத்தத்திலுள்ள அதிகப்படியான ட்ரைகிளிசரைடுகள்
ஈ. குறைந்த அளவே உள்ள ஹெச்.டி.எல் கொலஸ்ட்ரால்
உ. உணவில் குறைந்த அளவே உள்ள ஆக்ஸிகரணத்தைத் தடுக்கும் பொருள்கள்
ஊ. உயர் இரத்த அழுத்தம்
எ. நீரிழிவு நோய்
ஏ. உடல் பருமன்/ அதிகப் படியான உடல் எடை
ஐ. அமர்வு வாழ்க்கை முறை/ உடலுழைப்பு அற்ற வாழ்க்கை
ஒ. புதைத்தல்/ புகையிலை மெல்லுதல்

மாற்ற இயலாத உயிர்கொல்லிக் காரணங்கள்:
அ. வயது
ஆ. ஆண்/ பெண்
இ. பரம்பரை

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்
------------------------------------------------------
By சாரதி -

- July 28, 2017

எழுதியவர் : (14-Jan-19, 6:03 pm)
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே