உதயமாகுதே என்னிதயம்!

உதயமாகுதே என்னிதயம் உன்னாலே
பாலைவனத்திலே மரச்செடிகள் உண்டாச்சே
உனைகண்ட நினைவுகள் என்றும்-எனை
கொண்டு பௌர்னமிக்கு செல்லும்...
சிரிப்போடு ஒருகனம் நில்லும்
சண்டை போடுமே...
நீரைபோலவே நெஞ்சம்
துள்ளிஓடுதே என்றும்
ஏனோ? என்று என்னுள்
கேட்கும் நினைவுகள்...

ஆக்ஸிஜன் போன்றுதானே -என்
காதலுமே...
புன்னகை குளத்திலே
குளித்துதான் போவோமே
அன்பிற்கு இல்லை எல்லை
நீ சொன்னாயே...
நீயின்றி என்னுயிர்
என்னிடம் இல்லையே!
இடைவெளிகள் இன்றியே
காதல்செய்யும் பெண்மையே!
என் மனதில் நீயடி
பூக்கும் மலர்...

எழுதியவர் : sahulhameed (15-Jan-19, 5:51 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 97

புதிய படைப்புகள்

மேலே