அழகாய் மறைந்திருந்த ஆபத்து

நொடிதனில் உயிர் பறிக்கும்
விபத்தாய்
என்னுயிர் பறித்த விதி
உன் வடிவில்
ஒருநொடிப் பார்வையில்
இன்னுயிரே நீ எனது
ஆருயிரானாய்
ஈருடல் ஓருயிராய் ஆனோம்
இனி எல்லாம் நீயே என
நினைத்திருந்தேன்,
இல்லை அது பொய்யென்று
நான் உணரும் முன்னே
உடனிருந்து கொல்லும்
நோயாய்
அழகாய் மறைந்திருந்த ஆபத்து
கடைசிவரை தெரியாது போனது
உயிரைப்
பறித்து போகுமென்று
பறிபோனது என்னுயிர் அல்லவா
நடமாடும் நடைபிணமாய்
என் நடமாட்டம் இன்னும்..,