குலதெய்வம்
தொன்றுதொட்டு
எம்முன்னோர்
வந்துசென்ற
வழித்தடம்!
நானும்
வந்து
செல்கின்ற
வழித்தடம்!
என்
தலைமுறையும்
வந்தடையும்
வழித்தடம்!
என்னை
யாரென்று
கேட்காத
கருவறை!
நான்
சொல்வதை
கேட்கக்கூடிய
கருவறை!
எங்களால்
கட்டமைக்கபட்ட
கருவறை!
எல்லாக்
காலத்திலயும்!
எல்லாக்
கொடுங்கோண்மையிலும்!
எம்முன்னோர்களுக்கு
திணிக்கப்பட்ட
பசிக்கு
பின்பும்
பட்டிணிக்கு
பின்பும்
மாற்றுமத
ஆட்சியாளருக்கு
கீழிருந்தபின்பும்!
உன்னைவிட்டு
அகழாத
பிணைப்பு!
உனக்கும்
எனக்குமான
பிணைப்பு!
ஆம்
நாங்கள்
வந்தடைந்த
வழித்தடம்
அதுதான்
கோயிலுக்கெல்லாம்
கோயிலான
எந்தன்
குலதெய்வ
கோயில்!