அர்ப்பணம்

🙏🏻 அர்ப்பணம்

தன் மனதை, தேகத்தை கட்டுப்படுத்தி ஆள்பவர் யோகி
பழயனவற்றை அழித்து புதினத்திற்கு அடிகோலுவது போகி

மனிதருக்கு பிடித்ததோ கொடுக்கல் வாங்கல்
பண்டிகையில் சிறந்ததோ அறுவடைப் பொங்கல்

வீரத்தை பறை சாற்றுவது எருது தழுவுதல்
அவ்வெருதை பாராட்டுவது மாட்டுப்பொங்கல்

மானிடருக்கு இருப்பது மன உளைச்சல்
அதை போக்க பிறரோடு அளவளாவ வைப்பது காணும் பொங்கல்

நம்மை வாழவைப்பது உணவு
அதை உருவாக்குவது உழவு

மாற்றம் தோன்றினால் இனி நிம்மதி
நாளை இன்புற்றிருக்கும் நம் சந்ததி

நம்மை காக்கும் உழவர்களுக்கு வணக்கங்கள்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ராரே

எழுதியவர் : ராரே (16-Jan-19, 8:15 pm)
சேர்த்தது : ராரே
Tanglish : arpanam
பார்வை : 66

மேலே