காற்றிருக்கும் வரை

நீ என் வாழ்க்கையின்
ஒரு பகுதியக மட்டும் இருக்கலாம்
ஆனால்.........
உன் மீது நான் வைத்திருக்கும் காதல்
என் ஆயுள் வரை இருக்கும் - ஏன்
நான் இறந்த்தாலும் இருக்கும்
என்னை எரித்தாலுமது சாம்பலாகும்
அந்த சாம்பலை......
நீரில் கரைத்தாலும் சரி
காற்றில் தூற்றினாலும் சரி
காற்றும் நீரும் இருக்கும் வரை
என் காதலும் இருக்கும்.....

எழுதியவர் : ரா.விஜய் (28-Jul-10, 12:51 pm)
சேர்த்தது : zekar
பார்வை : 515

மேலே