காத்திருக்கிறேன்
அருகினில் இருந்தும் தொலைவினில் தொலைந்தாய்....
தொலைவினில் இருந்து கனவினில் கரைகிறாய்..
ஆயிரமாயிரம் வார்த்தைகள் பரிமாறி
மனங்கள் விழாக்கோலம் கண்ட நாட்கள்
இங்கே காட்சி படுத்தப்படுகின்றன நினைவுகளினூடே...
கானல் நீரின் பிரதிபலிப்புகள் மனதின் வலிக்கு மருந்தாய் இங்கே...
வலிகள் இன்று விழிகளின் பிம்பம்மாய்..
ஒற்றை புன்னகையோடு மௌனமொழி பேச காத்திருக்கிறேன்....