ஜேசு 48 from 1971 - சி எம் ஜேசு

ஜேசு 48 from 1971 - சி எம் ஜேசு

யுகத்தில் மலர்ந்தேன் கருவறை நின்று
முகத்தில் மகிழ்வை பெற்றோருக்கு தந்து

செஞ்சி பக்கம் சிறிதோர் கிராமம்
பஞ்சு மனசுள்ள தாய் தந்தைக்கு மகனாக

கிராமம் விட்டு நகரம் நகர்ந்தேன்
பட்டினப்பாக்கம் கடலோர வாழ்க்கை

கூலி வேலை தான் குழமி வாழ்ந்தோம் என
கூவி காதிலே உழைப்பை வளர்த்தாள் என் தாய்

ஆண்டவன் எனக்கு அன்றே தெரிந்தார்
உயர்ந்து நின்ற சாந்தோம் ஆலயம் பார்த்தேன்

வேலை வந்தது தந்தை கிராமம் செல்ல
வேண்டிய காலங்கள் அங்கே வாழ்க்கை நகர்ந்தது

மண்ணை ருசித்தேன் விண்ணை ரசித்தேன்
என்னைச் சுமந்த அன்னையின் சொல்கேட்பேன்

காலங்கள் சென்று 80 துக்கு வந்தது மீண்டும்
சென்னைக்கு என்னை அழைத்தார்கள்

தொடர்ந்தது கல்வி நான்கு முதல் எட்டு வகுப்புகள்
சென்னை சின்னமலை புனித சவேரியார் பள்ளி

இரண்டு வகுப்புகள் ஒன்பது பத்து
எழுச்சியை தந்தது சென்னை ஒ .எம் .சி.ஏ பள்ளி

பத்திலே புத்தி குறைந்து போனது
புற்றிலே புதையுண்டதைப் போலானேன்

தேர்வுகள் வரும்போதெல்லாம் தேடிசென்றேழுதுவேன்
சோதனைகள் தான் மிஞ்சும் சொல்லடிகளும் கூடும்

வாடிய முகத்துடன் தேடுவேன் வேலைகள்
மீண்டும் முடிந்தவரை படிக்கலாம் என்று தோன்றும்

முயற்சித்தேன் முடிந்தவரை முடித்தேன் தேர்வுகளை
இணைந்தேன் நந்தனம் அரசு பள்ளிதனில் 1990 - லே

சுற்றாடும் வணிகராக தந்தையும் சகோதரரும்
நான் கேட்பது யாவையும் தந்து வாழ்த்தினர்

முடித்தேன் 11 .12 முழுதும் தேராமல்
மீண்டும் மூலைக்குள் முடங்கியவனானேன்

ஆலயம் பணி புரிந்தேன் ஆண்டவனை தினம் கண்டேன்
கலைகளையும் வேலைகளையும் கற்க வழி பிறந்தது

இசைகல்லூரிக்கு சென்றேன் இசைக்கலைமணி வென்றேன்
இதயம் மகிழும் வேலை இதுதான் என்றறிந்தேன்

அடுத்தொரு படிப்பேனும் இசையாசிரியர் பயிற்சி
முடியாமல் தோற்று மீண்டும் வேன்றேடுதேன்

வாடாமல் ஓடி இணைந்தேன் இந்திய இசை
இயக்கம் குறைந்தது சான்றிதழை வாங்கி விட்டேன்

படிக்கும் காலங்களில் வீடுகளில் இசை கற்பித்தேன்
அதுவே தொழிலாகி தொடர்கிறேன் இன்று வரை

கவிதைக்கு மயங்கினேன் வார்த்தைகளை வார்தேடுத்தேன்
கற்பனைகள் இல்லாமல் அனுபவங்களை ஆல்பங்களாக்கினேன்

சொந்தமான தந்தை சொர்க்கத்திற்கு செல்லும் நேரம்
கடமைகள் தவறாமல் உழைப்பை அதிக படித்தினேன் 1999-இல்

ஊதியம் வந்தது உறுதுணையான மாணவர்களுடன்
கவலை வரும்போது கைபிடித்த பெற்றோர்களை நினைவு கூர்கிறேன்

அரசியல் இல்லாமல் மதபேதம் பார்க்காமல்
இசையை மட்டும் இறைவனாகப் பார்த்து இயன்றதை செய்கிறேன்

காதலை விட்டேன் மோதலை தவிர்க்க - என் குடும்பம்
நல்ல மனைவியை எனக்கு துணையாக்கியது 2006 -இல்

காலங்கள் செல்ல செல்ல இல்லத்தை உயர்த்தினோம்
உள்ளத்தை ஒன்றாக்கி ஒரே குடும்பமாய் வாழ்கிறோம்

வொவ்வொருவரும் வீட்டின் தூண்களாய் இருந்து கொண்டு
நாட்டிற்க்கு கெடுதல் இல்லாத நன்மையினை செய்கிறோம்

சுத்தங்கள் விரும்பி சத்தங்கள் இல்லாமல் சுகம் காண
அன்பின் வழி தேடி வாழ்வை பயணிக்கிறேன்

தோழர்களுக்கு துணையாகி அவர்களின் மனங்களுக்கு மருந்தாவேன்
உலகினின்று தனியாகி பூமியின் ஆற்றலை போற்றுவேன்

குழந்தை பேரு அற்று கண்கள் குளம் ஆக நல்ல
வளமும் நலமும் பெற்று என் மகன் கண்டேன் 2010 -இல்

உறவுகள் மறக்கவில்லை பிரிவுகள் ஆகிவிட்டது
நிறைவுகள் அடையாமல் அவர்களை நெருங்க மனமில்லை

சுற்றிருக்கும் தெரிந்தவர்கள் சுகம் கேட்கா சொந்தங்களாய் - நான்
பற்றியிருக்கும் இசையில் வாழ்பவர்களும் என் சொந்தங்களே

சாதனை என்று ஏதும் இல்லை சாதிப்பேன் என்றும் சொல்லவில்லை
நல்லவனாய் வாழ்ந்து மரிப்பதை நன்மையென உளம் வைத்துள்ளேன்

சிந்தனைகளை கட்டவிழ்த்துள்ளேன் சீர்மிகு உலகம் காண
சந்தைகளாய் வந்துதிக்கும் வலைதளங்களின் கலைக் களங்களிலே

உலகம் எனக்கு நிறைந்த இன்பம்
நான் தான் அதற்கு நிறைவில்லாத துன்பம்

கோவாவிற்கு பயணித்தேன் குடும்பத்தோடு
கோவில் கடற்கரைகள் கண்டு என் மனம் பதித்தேன்

கோவாவின் அழகும் அதன் பல கடற்கரைகளும்
மகிழ்ச்சியை தந்து என் வாழ்வில் எழுச்சியை உண்டாக்கியது

சிங்கப்பூர் சென்றேன் சீர்த்திருத்தங்கள் கண்டேன்
சிந்தை மகிழ்ந்த அந்நாட்களை என்றும் மறவேன்

அடுக்கி வைக்கப்பட்ட பெட்டிகளாக மேகத்தினை எட்டிப்பிடிக்கும்
கட்டிடங்களின் உயரங்கள் கண்டு வியப்படைந்தேன்

மலேசியா சென்றேன் மனங்களால் மகிழ்ந்தேன்
பசுமை பரப்பளவை கண்டு உள்ளம் பூரித்துப் போனேன்

அழகிய சாலைகள் அதன் இரு புறங்களும் வேலைப்பாடுகள்
கட்டுப்பாடுகளை கடமைகளாக பின்பற்றும் மக்களை கண்டேன்

விவிலிய பயணம் சென்றேன் இல்லத்தோடு - தெய்வீகத்தை
உள்ளதோடு நிறைத்து உலகை மறந்தேன்

சென்னையில் இருந்து மஸ்கட் - வான்வெளி பயணத்தில்
விமானத்திற்குள் பிஸ்கட் சாப்பிடுவதற்குள் வந்து விட்டது

சோதனைகளை கடந்து அடியெடுத்தோம் அழகிய கடைகள்
அதிசய பொருட்கள் என குவிந்திருந்த பொருட்கள் கண்டேன்

சின்ன ஓய்விற்குள் உள்நிறைத்தோம் சந்தோஷங்களை
படங்கள் பார்வைகளென பரபரப்பாக்கிய மஸ்கட் கடை வளாகத்தில்

மீண்டும் விறுவிறுவிப்பாகிய விமான பயணம்
கலையா துயில்களோடு கருத்தாய் இறக்கியது ஜோர்டானில்

பெட்டிகளை இழுத்துக்கொண்டு பொடி நடையாகி
உள் இணைந்தோம் வாகனத்திற்குள் தங்கும் விடுதி செல்ல

ஓய்வானோம் பழகா இடமான அழகிய அறைகளில்
பதிந்தேன் நினைவுகளை ஓய்வறியா உழைப்பாக்கினேன்

உணர்வுகள் சொன்னது உயர்ந்த புனிதங்கள் நிறைந்த இடங்கள் இது
இங்கே தயக்கமில்லாமல் இறையினை இயக்கமாக்கிய தருணங்கள் அதிகம்

ஓய்வெடுத்து உடைகளை மாற்றி மாற்றி அணிந்து வளம் வந்தேன்
கனவில் வாழ்வதை போல நிஜத்தில் நெகிழ்ந்தேன்

பாவங்களை எண்ணி உளம் வருந்தினேன்
பொய்களை புரட்டுகளை இருட்டுகளை அறிவின் குருட்டுகளை

நினைவில் நிற்க வைத்து நிஜமான உலகின் இறை வாழ்விடத்தில்
புனிதத்தை அறிவொளியால் மிளிர வைக்க உறுதி எடுத்தேன்

இவ்வாறாகி அருளிடங்களில் உழன்று சுழன்று ஜோர்டான்
ஜெருசலேம் ,பெத்லகேம்,இஸ்ரேல் ,பாலஸ்தீன், எகிப்து எனும்

உலக வரைபடத்தில் பார்த்தவர்களை உள்நின்று கண்ணுற்றேன்
வியந்து நின்று போற்றினேன் என்னையும் எழுத்தாக்கிய நன்மைக்காக

ஈடில்லா நன்மைகள் எனக்கே இயற்கையின் இன்பங்கள் என்றே
உணர்வில் நிறைத்தேன் நினைவுகளை பகிர்கிறேன் தயக்கமில்லாமல்

உருண்டோடும் காலங்களோடு உழைப்பும் உணர்வுமாகி நடக்கிறேன்
இதயங்கள் எழுச்சி காணும் நோக்கிலும் நன் முயற்சிக்கும்

இடையிடையே எழுகின்ற இல்லத்தின் பாடுகள்
குறுக்கும் நெடுக்குமாகும் மகிழ்வினால் மறைந்து போகின்றன

அனுபவங்களே என் இயக்கங்களுக்கான ஊன்று கோல் - காலத்தின்
அதிசயங்களே என் வாழ்க்கைக்கான திறவு கோல் என்றாலும்

கடன் மிகு உதவிகள் தென்றலாய் என்னை தாலாட்டுகிறது
கருத்தாய் அவைகளை நான் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதனாலே

ஆலய காணிக்கையாக வரும் சன்மானம் நான் இசை குருவென்பதால்
கோவில் தட்சணையாக வரும் சம்பளம் இசையினை கற்ப்பிப்பதால்

பணிகள் ஒவ்வொன்றிலும் பண்பை கலக்கின்றேன் - நான்
பார்வை ஒவ்வொன்றிலும் என் அன்பை விதைக்கின்றேன்

அமைதியும் ஆழ்ந்த நன்மை செருக்குடனும் வளம் வருகிறேன்
வாழ்வியலேனும் புத்தகத்தில் நன்மை வரலாற்றை உருவாக்க

கதைகளை விட்டுவிட்டேன் கவிதைகளை நேசிக்கிறேன்
காதலை விரும்புகிறேன் அன்பே வாழ்வாவதால் - உங்கள் சி. எம் .ஜேசு

தொடரும் . . . .

எழுதியவர் : c m jesu prakash (19-Jan-19, 10:12 pm)
பார்வை : 33

மேலே