ஒரு முகக் காதலன்-

உன்னை நான் கண்ட முதல்
என்னுள்ளத்தில் நிறைந்தாய் நீ
நான் இப்போது காண்பதெல்லாம்
உன்னையே, காணும் பொருளிலெல்லாம்;
என் சுவாசமும் நீயானாய்
ஆனால் நீயோ, பெண்ணே என் முதல்
பார்வைக்கு இன்னும் பதில் கூட தரவில்லையே
என்னைப் பார்க்கவும் அஞ்சுகிறாயோ, இல்லை
என்னை வெறுக்கிறாயோ நானறியேன்
நானோ என்னுள் உனைவைத்து என்
காதல் தேவதையாய் பூஜிக்கின்றேன்
பூர்வ ஜென்மத்தில் ஒன்றாய் சேர்ந்திருந்தோமோ
நாம், இப்படி என்னை உன் பித்தனாய்
உன்னை நான் பார்த்த முதல் பார்வை மாற்றியது?
நீ என்னை பார்க்காமலிருப்பது இப்பிறவியில்
நான் செய்த பூர்வ பாவத்தாலோ, தெரியலையே
இப்படியே இந்த என் காதல் ஒரு முகக்காதல்
என்றே இருந்தாலும் உன் மீது நான் கொண்ட
காதல் நான் உள்ளவரை என்னுள்ளே இருக்கும்
என் சுவாசம் எல்லாம் உன் ஸ்வாசமாய்
நீ அறியாது போயினும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jan-19, 2:56 pm)
பார்வை : 341

மேலே