நாடி பிடித்து பார்க்காதே
தேடிப் பிடித்த வண்ணத்துப்பூச்சி
ஆடிப்பாடி என் விரலில் விட்டு
சென்ற வண்ணக் கலவை போல்
தான் உன் காதலுமடி....
ஓடிச் சென்றாலும் உன் உள்ளமது
பாடிக் கொண்டுதான் இருக்கிறது
என் இதய வீணையோடு சுதி சேர
அழகான பாடலாய்..
நாடி பிடித்து பார்க்காதே என்
காதல் நோயறிய...பதிலுக்கு என்
வீடு தேடி வந்து உன் இன்முகம்
காட்டி விடு நான் குணமடைய...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
