கற்பியல்

காதல் என்ன வெறுஞ்சொல்லா
உன் நெஞ்சம் என்ன கருங்கல்லா
என் காதல் ஒரு தேன் கூடு
ஏன் நெருங்குகிறாய் கல்லொடு
கண்ணில் துனித்தாலே கலங்கிடுவேன்
நீ கருவில் அல்லவா அடிக்கிறாய்
காதலை மண்ணில் புதைய விட்டு மலர் வளையம் வைக்கிறாய்
ஒரு நொடியும் விடாமல் நினைக்கிறேன்
ஒரு விடையும் இல்லாமல் துடிக்கிறேன்
நீ கண்ணில் விழுந்ததாலே கண்ணீர் வழிகிறதே
நீ நெஞ்சைப் பற்றியதாலே இதயம் எரிகிறதே
தீராத நோய் தந்த கன்னியே
சிறு கருணையும் கொள்ளாத பெண் நீயே....

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (24-Jan-19, 5:57 pm)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 340

மேலே