வித விதமாய்
புரிதல் விட்டுகொடுத்தல்
தாம்பத்ய
சூத்திரம் எனில்
விவாக மந்திரம்
பரஸ்பர இணைப்புபாலம்
பரஸ்பரம் பரிதவிக்க
சுயநல
சோதனை தலைவிரிக்க
கொண்ட துணையின்
பலவீனங்கள்
பகடையாக்கி விளையாடும்
விளையாட்டில்
விளையாட்டு வினையாகி
கொண்ட துணை
நடிக்க தெரியாது போட
என்று விலகிவிட
சுயநலமது புதைகுழிக்கு
கைபிடித்து அழைத்து
செல்ல
இதுபுரியாது முட்டாள்கள்
கைய்யில் இருந்ததை
பறிகொடுத்து
விதவிதமாய் தேடும்
விநோதம்..,