எதிர்பார்ப்பு

இன்னைக்காவது அவளிடம் கொடுக்க முடியுமா..? என்ற கேள்வியுடனே நடந்தேன் தினேஷ் ஆகிய நான். மூன்று மாதங்கள் ஆயிடுச்சு..மனசுக்குள்ள ஏதோ ஒரு இனம்புரியாத பயம்...
நம்ம கொடுக்கும் போது... எப்படி எடுத்துக்குவா..? திட்டுவாளோ...? பல கேள்விகள்... எப்படிக் கொடுப்பது... எங்கவச்சுக் கொடுப்பது.. பஸ்டாண்டில் கொடுக்கலாமா... எல்லோர் முன்னாடியும் திட்டிட்டா...
தினமும் தான் அவளை பார்க்கிறேன் ஆனாலும் இன்னைக்கு ஏதோ ஒரு பயம்... பட படப்பு....
அதோ வருகிறாள் இன்னும் சில அடி தூரம் தான்.. தயாரானேன் கொடுப்பதற்க்கு...

தயங்கி தயங்கி கொடுத்தே விட்டேன்... சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்... இப்போதுதான் பயம் நீங்கியது... ஏன் இவ்வளவு நாள் கொடுக்கணும்னு தோணலையா பரணி கேட்க... இல்ல கொஞ்சம் எதிர்பாரா செலவாகிடுச்சு... அதுதான் கொஞ்சம் லேட்... சரி சரி என தலையாட்டிக் கொண்டே எண்ணிப்பார்தாள் பத்து நூறு ரூபாய் தாள்களை... மனதிற்கோர் நிம்மதி மூன்று மாதங்களுக்கு முன்னாடி ரெண்டு நாள்ல திருப்பித்தரேனு சொல்லி வாங்கிய ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்ததில்....மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்தேன்..

எழுதியவர் : சா.மனுவேந்தன் (25-Jan-19, 10:27 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : edhirpaarppu
பார்வை : 374

மேலே