ஹைக்கூ

ஹைக்கூ என்றால் என்ன...?

அனைவர் மனதிலும் தோன்றும் கேள்வி இது.. ஏன் கவிதை வரிகளை மடக்கி எழுதினால் அது ஹைக்கூதானே என்ற கேள்வி நமது மனதில் தோன்றலாம்...? ஹைக்கூ வைப்பற்றி புரிந்து கொண்டால், தெரிந்து கொண்டால் நலம் பயக்கும் என்று நம்புகின்றேன்..

ஹைக்ககூ என்பது மூன்று வரிக் கவிதை, இரண்டு வரிகள் கேள்வியாக அமைய மூன்றாவது வரி பதிலாக அமையப் பெற்றதுபோல் அமைந்தது...

இரண்டு வரிகளுமே கேள்வியாக மட்டும் அல்ல ஏதாவது ஒர் எதிர் பார்ப்பை தூண்டுவதாகவும் அமைந்திருக்கும்..

ஹைக்கூவின் தோற்றமும் வளர்ச்சியும்

ஹைக்கூ என்பது ஜப்பானில் தோன்றிய ஒரு கவிதை வடிவம்... ஜப்பானியர்கள் உலகிற்கு போன்சாய் என்ற கலையைப் போலவே இக் ஹைக்கூவினையும் குறுக்கி அமைத்துள்ளனர்..

தமிழ் வளர்ச்சியில் முதல் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் என்று உள்ளது போல்... ஜப்பானில் அவர்களின் தலைநகரை வைத்து ஆறு பிரிவுகளாக பிரித்துள்ளனர்... அவற்றை பற்றி விரிவாக எழுதுவதற்கு நினைத்தாலும், தற்போது அவற்றின் தலைப்பை மட்டும் சுட்டுகின்றேன்...

நாராக் காலம் (கி.பி. 700 முதல் கி.பி
794 வரை)

ஹாயன் காலம் (கி.பி. 794 முதல் கி.பி
1192 வரை)

காமெக்கூரா காலம் (கி.பி. 1192 முதல் கி.பி
1332 வரை)

நான்போக்குச்சாக் காலம் (கி.பி. 1332 முதல் கி.பி 1603 வரை)

எடோ காலம் (கி.பி. 1603 முதல் கி.பி
1863 வரை) - ஹைக்கூ காலம்..

டோக்கியோ காலம் (கி.பி. 1863 முதல் வரை)

இந்த ஆறு காலங்களில் ஐந்தாவது காலமான எடோ காலத்தில் தான் ஹைக்கூ என்பது தோன்றியது...

ஹைக்கூ ஆரம்பத்தில் ஹெக்கூ என்று அறியப்பட்டது... பின்னர் ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று...

ஹைக்கூ என்றால் ஜப்பானிய மொழியில் அணுத்தூசி என்று பொருள்...

தமிழில் ஹைக்கூவை ஐக்கூ என்று அறியலாம்..

ஐ + கூ= ஐக்கூ

ஐ என்றால் கடுகு
கூ என்றால் பூமி

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற முதுமொழியினை ஞாபகத்தில் கொள்வோம்.

தமிழில் ஹைக்கூ வினை துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விகுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

ஹைக்கூவின் முன்னோடிகளாக அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் திரு. மோரிடேகே (1473 - 1549 ) மற்றும் சோகன் (1465 - 1553) ஆகியோர் முன்னோடிகளாக அறியப்படுகின்றனர்..

ஜென் மதம் ஹைக்கு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது... ஜென் தத்துவங்கள் எவ்வளவு எளிமையானதோ அது போலவே அவர்களின் மத வளர்ச்சிக்கு எளிமையான ஹைக்கூ வினை பயன்படுத்தி ஹைக்கூவின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்துள்ளனர்....

ஹைக்கூ அடி அமைப்பு
மூன்று அடிகள்..
முதல் அடி 5 அசை, இரண்டாவது அடி 7 அசை, மூன்றாவது அடி 5 அசை...

அசை என்பது ஜப்பானிய மொழியில் ஓஞ்சி என்றழைக்கப்படுகிறது... மேலும் ஒவ்வொரு எழுத்துக்களும் ஒர் அசையாக பொருள் கொள்ளப்படும்.. இவற்றில் ஒற்றெழுத்துக்கள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது..( தமிழுக்கம் பொறுந்தும்).. தற்போது இந்த 5-7-5 என்ற மரபு மறைந்து விட்டது...

இது என்னாலான சிறு முயற்சி.. தவறுகள் இருப்பின் சுட்டவும்... திருத்திக்கொள்ள ஆவலாய் உள்ளேன்.. இதனை பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்களுக்காக...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (26-Jan-19, 2:09 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : haikkoo
பார்வை : 5215

சிறந்த கட்டுரைகள்

மேலே