பசியே உனைக் கூர்ந்துகுறிக் கொள்ளாரேல் கண்டாரே மண்டு பிணிகள் - பசி, தருமதீபிகை 28

நேரிசை வெண்பா

வேல்வல்லார் வாள்வல்லார் மேதினியி லேதெளிந்த
நூல்வல்லார் தீது நுவல்கில்லார் - சால்பெல்லாம்
கொண்டார் எனினுமுனைக் கூர்ந்துகுறிக் கொள்ளாரேல்
கண்டாரே மண்டுபிணி கள். 28

- பசி, தருமதீபிகை,

- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வீரர்கள், புலவர்கள், ஆசார சீலர்கள், அருந்தவ நிலையினர் வேறு யாவராயினும் பசியை உணர்ந்து மதித்து ஒழுகாராயின் பிணிகள் தொடர்ந்து மிதிக்க அழுவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

குடல் அழத் தின்றவரை நோய்கள் உடல் அழத் தின்னுமாகையால் பிணிகள் ஈண்டு எண்ண வந்தன.

மண்டுதல் – நெருங்குதல்,

பிணியுறாது பேணி ஒழுகுக என்றும், பசியுணர்வு அருமருந்தென அருள் சுரந்துள்ளது என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jan-19, 6:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே