மாய்ந்ததோ ஒழுக்கநெறி
மாய்ந்ததோ ஒழுக்கநெறி
************************************************
கயல்விழியாள் பின்தொடர செயல்வழியில் கேடுறுவார்
அயல்மனையாள் கைகோர்த்து ஊரூராய்ச் சுற்றிடுவார்
தயங்காது சங்கமிப்பார் காலநேர வரம்பின்றி
உயர்வான ஒழுக்கநெறி மாய்ந்ததோ செயலிழந்தே !