தெய்வமகள்

மார்கழி மாத கடைசி நாள்
எங்கள் ஊர் பெருமாள் கோவிலுக்கு
சென்றேன் நான், பெருமாளை சேவித்து
கோதையாம் ஆண்டாள் நாயகி
தனி சந்நிதிக்கு சென்றேன்
அழகிய முத்தங்கியணிந்து தோளில்
பச்சைக்கிளியுடன் கோதை நாச்சியார்
ஆண்டாளின் திவ்யா தரிசனம் ......
சூடிக்கொடுத்த சுடர்கொடியல்லவோ அன்னை
சாஃஷாத் மாலவன் திருவராங்கனையே
மனதில் காதலனாய் வரித்து அவனுடனேயே
திருவரங்கத்தில் ஒன்றுகலந்தவள்.....
தந்தை விஷ்ணுசித்தன் கண்டெடுத்த பெண்பிள்ளை ...
கண்களை மூடி திருப்பாவையை மனதில் துதித்து
மனமுருக துதித்தேன்........ கற்பூர ஆரத்தி ......
மணி ஓசை......யாரோ என்னைத் தொட்டு
என் வேட்டியை இழுப்பதுபோல் உணர்ந்தேன்
கண் திறந்தேன் ......... என் பின்னே அந்த சிறுமி
பட்டு பாவாடையில் .....ஆண்டாள் கொண்டையுடன்
என்னைப் பார்த்து புன்முறுவல் தந்தாள்.....
எனக்கு மயிர்க்கூச்சல் எடுத்தது ......இது என்ன
கனவா, நெனவா என்று விக்கித்துப்போய் .....
கோதை நாச்சியாரை ஒருமுறை மீண்டும் சேவித்து
திரும்பினேன்...... அந்த 'ஆண்டாள் சிறுமி, காணவில்லை!

நான் கண்டது அந்த தெய்வமகளையா...... இல்லை
அந்த சிறுமி யார்..... எங்கு போனாள்......
கோவிலுக்கு வெளியே சென்று பார்த்தும் எங்கும்
அவளைக் காணக் கிடைக்கா போனேனே ...
சிறுமியாய் வந்து எனக்கு தரிசனம் தந்தாளோ
நான் வணங்கும் கோதை நாச்சியார் .......?
,
'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jan-19, 2:36 pm)
பார்வை : 82

மேலே