தோழிக்கு வாழ்த்து

கல்லூரி காலத்தின்
அழகிய உறவு நட்பு - அதில்
எனக்கு கிடைத்த
அரிய உறவு உன் நட்பு
அடிவாங்கிய நாளே
இல்லை பெற்றோரிடத்தில் - ஆனால்
அடிவாங்காத நாளே
இல்லை உன்னிடத்தில்
வேண்டுமென்றே கோபப்படுத்தி
வேடிக்கைபார்த்தாய் - அது
தெரிந்ததால் அதையும்
ரசித்தேன்
காந்தமற்ற புன்னகையில் - அவள்
கவனத்தை ஈர்ப்பால்
அழகான முகசுழிப்பும்
ஆயிரம் கதை சொல்லும்
கள்ளமில்லா கர்வத்தாலே
அனைவரையும் கவர்ந்திழுப்பல்
திமிராக இருப்பதே
உனக்கு அழகு
திமிரையும் கூட்டுகிறது
உன் அழகு
கடவுளுக்கு நன்றி சொன்னேன் - உன்னை
சந்திக்க வைத்ததால்
மதுவும் தயக்கம் கொள்ளும் - இந்த
மாதுவை மது எனறு அழைத்ததால்
தங்கையாக மாறிப்போனாய்
எந்த கணத்திலிருந்து தெரியாமல்
குழந்தைக்கும் கோபம் வரும்
உன் குழந்தை தனமான பேச்சு
உன் அழகான குறும்பிற்கு
நான் மட்டும் தன சாட்சி
சீட்டு குருவியாய் இருக்கும் - நீ
சிறப்போடு வாழ
தென் அரசியான நீ தென்னகத்தை
மட்டுமில்லாமல் உலகத்தையே ஆள
என் அன்பு வாழ்த்துக்கள்

எழுதியவர் : புவனேஸ்வரி (30-Jan-19, 3:33 pm)
சேர்த்தது : புவி
Tanglish : thozhiku vaazthu
பார்வை : 666

மேலே