அதே கோலத்தில்

என் ஆழ்மனதில்
இன்றும்
நீ எனைவிட்டு
விலகிய
அதே கோலத்தில்
காலங்கள் மாற
என் கோலம் மாறிப்
போனது
உன் புதுகோலம்
காண
ஆசைப்பட்டேன்
தேடினால் கிடைக்கும்
என்றார்கள்
எங்கே என்று
கேட்டேன்
கூகுளில் என்றார்கள்
தேடினேன் முகவரி
கேட்டது
அழ்மனதின் உள்ளே
சென்று
உன் முக வரியை
சொன்னேன்
தேடிய பின் முக வரி
ஒத்துப்
போகவில்லை என்று
சொல்லியது
எனக்குள் நீ இருக்க
எதற்கு
உன் புதுக்கோலம்
தேட என்று
விட்டு விட்டேன்
தேடுவதை