நான் நாமாவோம் வா
நான் நாமாவோம் வா...
பிரிதல் கணங்களை நொறுக்கி சேர்வோம் வா...
இறுமாப்பை விடுத்து இணைவோம் வா...
காயங்களை இன்னும் ரணமாக்காமல் மருந்திடுவோம் வா...
பேச்சை நிறுத்தி இதய இடைவெளியை அதிகரிக்க வேண்டாம் வா...
கோபத்தை உதறி கொஞ்சிப் பேசி மகிழ்வோம் வா...
சிந்திய கண்ணீரில் மனக் குமுறல்களை கரைத்து தீர்ப்போம் வா...
அன்பே வாழ்வென அதிசய இணையாக திகழ்வோம் வா...