உருக்குலைக்கப்பட்ட வேலை நிறுத்தம்

தியாகமா செய்தார்கள்?
செய்த வேலைக்கு முறையாக ஊதியம் பெற்றனரே
திறமை பெற்றவர்களே வேலைத்தேடி தினமும்
நாடெங்கும் அலைகின்றனர், இவர்களுக்கென்ன கேடு?
அரிதான கேள்வியால் அங்கலாய்ப்பு செய்யும்
அற்புதமாக அனைத்தும் தெரிந்த பொதுவானவர்களே
அடிப்படை ஊதியம் என கடை நிலை ஊழியரிலிருந்து
கடுமையான தேர்வெழுதி வரும் அதிகாரி வரையில்
அரசாங்கம் வரைவு செய்த ஊதியத்தையே வழங்குது
அவ்வூதியம் யாதென்று அலசி ஆராயுங்கள்
ஆண்டுக்கொரு முறை அடிப்படையில் 3% உயர்வு
அதில் மாதந்தோறும் 12% 10% என்று அரசு பிடித்தம்
12 மாதங்களில் 11 மாதங்கள் விடுமுறை இவர்களுக்கு
இவர்கள் ஏன் செய்கிறார்கள் வேலை நிறுத்தம்?
(ஒரு நெல் போட்டால் ஒரு பிடி நெல் விளையுது
எப்படி விவசாயி நட்டப்படுவான் என்பதைப் போல்)
அவ்வாறு அரசு விடுமுறை இருப்பின்
நியாய விலைக்கடையில் அரிசி வாங்குவதெப்படி,
நிற்க, எங்கள் ஊதியத்தில் அரசு பிடித்த 12% 10% தொகை
எங்கே என்று கேட்டும், காலியாய் உள்ள பணியிடத்திற்கு
உங்களில் சிறந்த அறிவாளியை நியமிப்பதற்காகவே
நீண்டு சென்றது எங்கள் நீதி போராட்டம்
கோள் மூட்டி உங்களால் எங்களை கோதச் செய்தனர்
ஆண்டவனுக்கும் மேலான ஆளும் வர்க்கத்தினர்
அரசின் அதிகாரத்திற்குள் இருக்கும் நாங்கள் அடங்க
அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் நீங்கள் சிந்தியுங்கள்.
– - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (31-Jan-19, 4:42 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே