காதல்- தொலைந்த என் இதயம்
அப்படியென்ன இமைகள் மூடாது
என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்
நீ பெண்ணே, ஓ ஓ, புரிகிறது
என்னுள் என் இதயத்தை தேடுகின்றாயோ
அதைத்தான் உன்னைப்பார்த்த உடனேயே
உன் இதயத்துள் இழந்துவிட்டேன் நான்
நீ அறியாயோ, தேடிப்பார் உன் இதயத்தில்
அங்கே நான் உன்னவனாய்க் காண்பேன் பார்