என் பேனாவால் உன்னை வரைந்தேன்
என்பேனாவால் சொல்லில்
குயிலை வரைந்தேன்
பாடல் கேட்கவில்லை கிளையில்
அமைதி நிலவியது !
என் பேனாவால் சொல்லில்
உன்னை வரைந்தேன்
உன் கால் கொலுசொலி கேட்டது !
என் பேனாவால் சொல்லில்
கிளியை வரைந்தேன்
அமைதியாய் கிளையில் அமர்ந்திருந்தது !
என் பேனாவால் சொல்லில்
உன் அழகை வரைந்தேன்
இதயப்பறவை வானில் சிறகு விரித்தது !