காதல்
கண்ணே உன்னைப் பார்த்தபின்
வானவில்லை நான் பார்ப்பதே இல்லை
வானவில்லுக்கு எது ஸ்திரம் -அது
வரும் வந்த சுவடும் தெரியாமல் மறைந்துவிடும்
நீயோ பெண்ணே நிரந்தர வானவில்
உன் உடல் அங்கம் அங்கமாய் ஒவ்வோர்
நிறத்தில் எழிலாய் காட்சிதருதே
தந்தத்தில் கடைந்தெடுத்த உன் உடல் வெண்மை
உந்தன் வட்டமுகம் தங்கநிற சந்திர பிம்பம்
உந்தன் அதரங்கள் கொவ்வை சிவப்பு
உந்தன் பாதங்கள் தாமரை
உந்தன் கூந்தலோ கார்மேகம்
காதில் நீ அணிந்த குண்டலங்களோ பச்சை
நேர்த்தியான உன் மூக்கிற்கு அணிகலனாக
சிவப்பு மூக்குத்தி - நீண்ட உந்தன் கழுத்தில்
முத்தும், பவளமும் மஞ்சள் வைடூரியமும்
அணிகலனாக வெகுவே அலங்கரிக்க
உந்தன் உடலின் பொங்கும் இளமையை
லகுவாய் மறைத்து நீ கட்டிய சேலையும்
கச்சியும் , ஒய்யாரமாய் நீ ஆடிவர
அந்த ஆகாய வானவில்லே வெட்கி
மறைந்ததோப் என்று தோணுதடி
நீயோ என் மனதில் என்னை
என்றும் எப்போதும் கிரங்கவைக்கும்
மறையா வானவில்தானே என்னவளே