பொன்னிறக் கூந்தல் வெள்ளை அழகி

பறித்த பூவை என்ன செய்வதென்று
தெரியாமல்
திகைத்து நின்றாள் பொன்னிறக் கூந்தல்
வெள்ளை அழகி
வாங்கி
அவள் காதோரத்தில் சூடினேன்
மலரும் அவளும்
இணைந்து சிரித்தனர்
அவள் ஆங்கிலத்தில் நன்றி நவின்றாள் !

அவள் காதோரத்தில் வைத்த பூவை
உங்களுக்காக
கவிதையில் வைத்தேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Feb-19, 7:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2491

மேலே