அவளழகு
சொற்களால் கட்டி அடக்கிடலாம்
அவள் அழகை என்று நான் முயல
சொற்களையும் மீறி பொங்கி
ததும்பிய பேரழகு அவளழகு -பாவம்
என் சொற்களாலான கவிதை
அவள் அழகை முழுவதும் எழுதமுடியா
கவிதையாய் அவள் அலகின்முன்
நாணி நிற்கின்றதே