இன்னும் பயிற்சி வேண்டுமோ

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
சத்தமின்றி அவளை முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
அழுத்தமின்றி மென்மையாய் முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
கட்டித்தழுவாமல்
அவளை முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
எண்ணிக்கை குறைவாய்
அவளை முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
செல்லம் கொஞ்சாமல்
அவளை முத்தமிட!!

எத்தனை விதமாய்
முத்தமிட்டும்
சேய்யவளுக்கு தாயின்
தவிப்பு புரிவதில்லை..

அதுசரி!!
மொத்த அன்பையும்
ஒற்றை முத்தத்தில்
கொட்டிவிட முயலும்
என் பேராசை தான்
எத்தனைப் பெரியது !!

ஹா ஹா ஹா!!

எழுதியவர் : ரியாதமி (6-Feb-19, 12:32 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 373

மேலே