இடையில்லை கொடிமுல்லை
உன் சங்கு கழுத்தில்
தொங்கும் முத்து மாலை
நானாகவா... இல்லை
கண்ணிற்கு அழகாக கரு
மையாக நான் மாறவா...
சித்திரை பொங்கலன்று
சர்க்கரை பொங்கலாகவா..
உன் இதழோடு இதழ்
இனைத்து இனிப்புக்கு
எல்லை காட்டவா....
இடையினில் கொஞ்சும்
ஒட்டியாணமாகவா...இல்லை
இடையில்லை கொடிமுல்லை
என வர்ணிக்கும் கவிஞனாய்
நான் பாடவா....
ஏன் இத்தனை உருமாற்றம்
என்றெனைக் கேட்காதே..
ஈருயிர் ஓருயிர் ஆகும் போது
ஏற்படும் பரிவர்தனம் இப்படி
ஆவதுண்டு அன்பே...