காதல்
அன்றைய காதலர் , இன்றைய காதலர்
பற்றி ஏதாவது கூற முடியுமா என்று
என்னவள் எனைக்கேட்க, நான் சொன்னேன்
'அடியே , அன்றைய காதல் பௌர்ணமி நிலவில்
தாஜ்மஹாலைப் பார்க்க ஏற்படும் இன்பம் போன்றது;
இன்றைய காதலாவது, முது வேனிற்காலத்து
கொளுத்தும் வெய்யலில் பீச் மணலில் கொடைகூட
இல்லாது தம்மை மறந்து உறவாடும் காதலர்களின்
உள்ளம் போன்றது ' என்றேன் ; இதைக்கேட்டு அவள்
சற்றே நாணி கோணினால், ஏனெனில் அப்படி
பீச் மணலில் அலைந்து கொண்டிருந்தவர்
நாங்கள் இருவருமே-இன்றைய காதலர்!