காதல் திருடா

இருவர் உள்ளமும் கொள்ளை கொண்டவன்
காதல் எனும் திருடன் ,
திருடா திருடா காதல் திருடா
இரட்டைக் கொள்ளை செய்து விட்டாய் ,
திருடா திருடா, காதல் திருடா

இதயங்கள் தூங்கும்போது களவாடவில்லை நீ
பட்டப்பகலில் சினிமா பார்த்தோமே,
புரிகிறது அன்றுதான் கொள்ளையிட்டாய்,
எங்கள் கண்கள் எங்கு சென்றது
என்பதை கூர்ந்துதான் பார்த்தாயா,

/அன்று தொடங்கிய எங்கள் எண்ணங்கள்
இன்றுவரை ஓரிடத்தில் இல்லை,
அவளிடமும், என்னிடமும் தூது செல்கின்றதே,
இது உன்னால்தான் முடியும்,
என்னென்ன மாயமோ உன்னிடத்தில் ,

உலகில் ஒவ்வொரு இதயங்களையும்
கொள்ளை கொள்கிறாயே பக்கா திருடன் நீ
காதலும் நீயே, எமக்கு காவலும் நீயே
உன்னை எங்கள் இதயங்களில் பூட்டி விட்டோம் ,
இனி நீ எங்கள் வசம் , நாங்கள் உம் வசம் .

எழுதியவர் : பாத்திமாமலர் (8-Feb-19, 10:53 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaadhal thirudaa
பார்வை : 222

மேலே