ஒரு ப்ராபபலிடி தியரி
ஒரு ப்ராபபலிடி தியரி.
===========================================ருத்ரா
பிப்ரவரி பதினாலுக்கு
நானும் ஒரு வாழ்த்து தயாரித்தேன்.
அஞ்சல் பெட்டிச் சமுத்திரத்துள்
அதை அமிழ விட்டேன்.
யார் அதை பெறுவார்கள்?
யார் கையில் அது
பொன் முலாம் பூசும்?
யாருடைய இதயத்துள்
துடித்து அது
சுருதி கூட்டும்?
தெரியாது.
இதயத்தை இப்பொதே
அனுப்பி வைப்போம்.
காதலியை அப்புறம் பார்ப்போம்.
எப்போது பார்ப்பேன்?
தெரியாது.
இது காதலின்
ஒரு "ப்ராபபிலிடி தியரி"
========================================================