நம்பிக்கை ஒளி

..............................
வாழ்க்கையோடு கைகோர்க்க முடியவில்லையென கலங்காதே
தாழ்வுகளை அகற்றிவிடவே நம்பிக்கை ஒளிகொண்டாலே
ஐயங்கள் நீங்கிவிடும் தோழா நம்பிக்கைகொள்ளடா
தாய்மை சுகம்தரும் தாயின் வேதனைகளைபாரடா
அவள் பொறுமையாலே மகிழ்ச்சியை தருகிறாள்
அவளை போலவே சிந்தனை கொண்டால்
உங்கள் வாழ்வில் வெறுப்புகள் கசக்குமடா
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி போகாதே
வலிமை கொள்ளடா வழிகள் தெளிவாகுமடா
வலிகளை உங்கள் மனதில் புதைக்காது
பற்றோடு போராடு உறுதி கொள்வையடா
சுற்றிடும் உலகிலும் சுகமாய் வாழ்வாய்யடா
பாதையை திறக்க கண்களை நோக்கடா
விதியினை வென்று வேகமாய் வளர்வாய்யடா
தொலைந்து போகமுடியாத கருமை கனவுகளும்
விடை தந்தே உன்னுடன் போகுமடா

எழுதியவர் : அகிலன் ராஜா (11-Feb-19, 6:06 pm)
பார்வை : 228

மேலே