உருகிடுங்கள்...கருகிட வேண்டாம்...!

செங்கொடி எனப் பெயர் வைத்ததாலோ....என்னவோ?
செங்(எதிர்ப்புக்)கொடி....தூக்கினாயோ?
தூக்கிலிடும்...எம்தமிழர்க்காய்...........,
செந்நிறத்தீயில்....உன்தேகமதை,வருதிக்கொண்டாயோ..,
மூவுயிர் காக்க..உன் ஓர் உயிர் துறந்தாயோ...?
உயிர் துறப்பது, மட்டுமே...முடிவு எனில்.....போராட...,
எத்தனை உயிர்கள்...தினம்,தினம்....?
அந்த மூவருக்கும் கூட, வருத்துதலாய்...,உறுத்துதலாய்...நீ?
அறப்போராட்டம் வேண்டுமே......தவிர....,
உயிர்தரும் போராட்டம்....இனியும்...வேண்டாமே..!

எழுதியவர் : கு. காமராஜ் (30-Aug-11, 12:34 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 382

மேலே