பிப்ரவரி 14 💘💘💘
ஓராயிரம் விண்மின்கள் உண்டு வானில்
அதில் ஒன்றை கொண்டு காதல் தூது செய்தால்
என்ன என்னை கண்டு கொன்றிடவா போகிறது அந்த நிலவு ...
அப்படியும் என்னை கண்டு கொண்டு
நிலவே நீ நேரில் வந்தால்
அவள் நெத்தி சுடி வாங்கி தருகிறேன் ....
உன் நெத்தியில் இட்டுக்கொள் அப்படியேனும்
அவளை மிஞ்சுகிறாயா அழகில் என்று பார்கிறேன்...
என் தேவதை வானில் வந்தால் மேகங்கள் எல்லாம் உன்னை சுற்ற மறந்து விடும்....
அவள் முன்னே சென்று வட்டமிடும்....
அவள் பின்னே அலைந்து திரிந்து காதல் மழை பொழிந்து விடும்...
அழகான பிறை ஒளியின் மொழி உன்னதென்றால்
அவள் கண்ணின் ஒளி என்ன சொல்ல...
இருள் தேச பௌர்ணமி நீ என்றால்
என் பகல் தேச சந்திரனை என்ன சொல்ல...
மூன்றாம் பிறை அழகி நீ என்றால் அவள் புருவங்களின் பிறை அழகை என்ன சொல்ல...
அதோ அங்கு முகில் களுக்கு இடையில் உலா வரும் என் புள்ளி மான்
துள்ளி குதித்து வருவதை போல் உன்னால் வர முடியுமா....
அவள் இதழ்கள் வீசும் மௌனப் புன்னகையை உன்னாலும் வீச முடியுமா...
அவள் முகத்தின் முன்னாள் இடறி விழுந்த இரண்டு மூன்று நீண்ட முடி
அவள் மூச்சு காற்றால் முத்தம் பட்டு சொர்க லோகம் செல்வதை போல்
உன்னாலும் வரம் தர முடியுமா...
நிலவே பதில் சொல்
இல்லையேல் அவளிடம் என் காதல் சொல்ல
இன்றே நீ தூது செல்....
ஏனென்றால் இன்றைய தினம்
ரோஜா பூக்களின் தினம்
வானவில் வண்ணங்களின் தினம்
ஜோடி குயில்களின் தினம்
சொல்லிய கவிதையின் தினம்
சொல்லாத காதலின் தினம்
பிரிந்த இமைகளின் தினம்
இறந்த காவியத்தின் தினம்
எத்தனை காதல் நெஞ்சங்கள் இருந்தாலும் இறந்தாலும்
யுக யுகமாய் அழியாமல் ஆண்டு வரும் அன்பின் தினம்
அதுவே அழகிற்குரிய காதலர் தினம்...
Happy valentine's day.......