நிழலும் நிஜமும்

நிழலாக இருந்ததெல்லாம்
நிஜமாக மாறயிலே ..
நிஜமெல்லாம் நிழலாகி
போவதென்ன ..
சுட்டெரிக்கும் சூரியன்
சட்டென சிரிக்கையிலே...
வெள்ளி நிலா
பட்டென்று மறைவது
போல ..
காலை கதிரவன்
கண்ணொளியில்,,
பனித்துளிகள் மாயமாய்
தொலைவது போல..
துன்பம் என்பதும்
நிரந்தரம் இல்லையடா ...
மலை போல தேங்கி நிற்கும்
துன்பம் கூட..
சிறு இன்பம் நம் மனதில்
காணும்போது,,
சில்லு சில்லாய்
சிதறி கரைந்து போகும்..
துன்பம் ஒன்று உன்னை
தீண்டும் வேளையிலே..
சிறு இன்பம் தேடி
உன் முயற்சி இருக்கட்டுமே..
இயற்கையின் இல்வாழ்வில்
எந்த துன்பமும்
நிரந்தரமில்லை..
துன்பம் துயில்வதும்
இன்பம் துடிப்பதும்
நம் மனதின் கையிலடா..
துன்பம் தூர தள்ளி
இன்பம் கையில் கொண்டு
மகிழ்ச்சியாய் வாழ மனதை பழக்குவோம்...

எழுதியவர் : வே.சரவணன் (12-Feb-19, 11:42 am)
சேர்த்தது : வேசரவணன்
Tanglish : nilalum nijamum
பார்வை : 393

மேலே