வானம் பாத்த மண்ணே

வானம் பாத்த மண்ணே
வாசங்கானா பூவே...
கரிசல் காடே
கருவேல மரமே...
என் வருச நாடே
வறண்ட கூடே...
பாளமா உன்ன பிளந்தாலும்
பவுன மட்டும் தந்தவளே...
விதையது வீழ்ந்தாலும்
வீணா போகாதே...
நீ வாழ வச்ச சனம்
உன்ன வேரறுத்தாலும்...
ஆங்கர ஆகசமோ
ஆழி அலையோ
அடங்கா நெருப்போ
கோர காத்தோ
நாளை நாயம் கேக்கும்
கண்ண கசக்கி நிக்காதே...

எழுதியவர் : சி. பிரபாகரன் (12-Feb-19, 7:59 pm)
சேர்த்தது : சி பிரபாகரன்
பார்வை : 2289

மேலே