ஆக்ஸிஜன்
அப்பா என்று அவள்
அழைக்கும் ஒற்றைச் சொல்லில்
ஆக்ஸிஜன் நிரம்புகிறது நுரையீரலின்
அறைகளுக்குள்
அப்பா என்று அவள்
அணைக்கும் ஓர் அணைப்பில்
அண்டமெல்லாம் என் மார்புக்குள்
அடங்கி விடுகிறது
அப்பா என்று அவள்
அழும் ஒற்றை நொடியில்
அத்தனை துடிப்பு இதயத்தில் மட்டும்
அல்ல உடல் மொத்தமும் தான்
அப்பாவாகிப் போனேன் அதன்பின்
அப்பாக்களெல்லாம் அழகாகிப் போனார்கள்