தென் திசைத் தென்றலென

தென் திசைத் தென்றலென
*******************************************************

வடதிசையின் வாடையாக கயிலாயம்
கொண்டவளே பார்போற்றும் நாயகியே
தென்திசைத் தென்றலென பொதிகையில்
பொதிந்தவளே பொற்றாமரைக் குளத்தவளே
கீழ்த்திசையின் காற்றாகி கீழ்மண்ணின்
வளந்தன்னை சீராக்கி வைப்பவளே
மேல்திசைக் காற்றாக கடும்வெப்பத்
தாக்கங்கள் தணிவதற் குதவுபவளே
எத்திசைநீ கொண்டாலும் எங்கள்திசை
நோக்கிவந்து அருள்மழை பொழிந்துவிடு !

எழுதியவர் : சக்கரைவாசன் (13-Feb-19, 8:31 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 113

மேலே