இந்தப் பொண்ணு எனக்கு வேண்டாம்ப்பா
அழகான பொண்ணு. சொத்துக்காரி. ஒரே வாரிசு. அவள ஏன்டா மகனே 'பிடிக்கல வேண்டாம்'னு சொல்லற?
@@@@@@@
நாம பொண்ணுப் பாக்கப் போனபோது பொண்ணுகிட்ட தனியா பேசச் சொன்னீங்க இல்லையா?
@@@@@@
ஆமாம்..மனசுவிட்டு ஒருவரை நல்ல புரிஞ்சுக்குவீங்கன்னு தான் தனியா பேசச் சொன்னோம்.
@@@@@@@
அப்பா அந்தப் பொண்ணு அம்மா காலத்துப் பொண்ணா இருக்கிறா அப்பா.
@@@@@
அம்மா காலத்துப் பொண்ணுன்னா என்னடா மகனே?
@@@@
நாம தொலைக்காட்சித் தொடர், திரைப்படத்தில பாக்கிற இந்தக் காலத்துப் பொண்ணுங்க மாதிரி அவ இல்லப்பா.
@@@##
என்னடா சொல்லற இளவரசு?
@@@
அவள தனியாச் சந்திச்சதும் "என்ன உனக்கு பிடிச்சிருக்கா ஸ்வாதி"ன்னு அவளக்கேட்டேன். அவ சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது அப்பா.
@@@@@
என்னடா நடந்தது இளவரசு?
@@@@@
"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா இளவரசு"ன்னு சொல்லியிருந்தா நான் ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன். ஆனா அவளோ "எனக்கு உங்கள ரொம்பப் பிடிச்சிருக்குங்க"ன்னு மரியாதை இல்லாம அவமானப்படுத்திட்டாப்பா. இந்தக் கால நாகரீகம் தெரியாத இந்தப் பொண்ண நான் கட்டிகிட்டா என்னோட நண்பர்கள், எங் கூட வேலை பாக்கிற யாருமே என்ன மதிக்கமாட்டாங்கப்பா. இந்தப் பொண்ணு வேண்டாம், வேண்டாம், வேண்டாம்.
@@@@@
சரிடா இளவரசு. மனசைத் தேத்திக்க. உன்னோட விருப்பத்துக்கு மாறா நாங்க எதுவுமே செய்யமாட்டோம். வேற பொண்ணைப் பாக்கலாம். நடந்ததைக் கெட்ட கனவா மறந்திடுடா இளவரசு.
@@@@@
சரிப்பா
■■■■■■■■■■■■■■■■■■■■■■■ ■■■■■■■■■■■■◆◆◆■■■■