பிப்ரவரியால் ஒரு காதல் 14022019

நான் உனை நினைத்து
நாள்தோறும் மகிழ்ந்து
நன்காதலில் திளைத்த மனமதின்
நடுவினில் உனை புகுத்தி
நன்றாய் பூஜித்தேன் இதுவரை .

நாட்கள் பல செல்ல செல்ல
நான் கொண்ட காதல் பலம் கொள்ள கொள்ள
என் இதயம் ஆசையில் துள்ள துள்ள
உனை நாடி வந்தேன் மெல்ல மெல்ல
நீ மறைந்து சென்றாய் வான் வில்லைப் போல

ஓரிரு நாளில் உள்ள(த்)தை நான் கூற
ஒய்யாரமாய் நீ ஓடி ஒளிய
ஒவ்வொரு நாளும் நீ பார்வையால் துண்டிலிட
ஒருவாராய் இதயம் ஓங்கி துடிக்குதடி - காதலை
ஒத்துக் கொண்டு வருவாய் என காத்துக் கொண்டு நான்...
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (14-Feb-19, 9:25 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 35

மேலே