துடியன்ன இமைகள் காட்டுதி
துடியன்ன இமைகள் காட்டுதி
=====================================ருத்ரா இ பரமசிவன்
ஈயல் மூசு அடர்கான் அறையிடை
ஆறு உய்த்தன்ன ஏகுவன் ஆகி
ஆளித் தடம் ஒற்றி ஆர்சிலை சிலம்ப
பொருள்வயின் பிரிந்தான் கண்ணுள் அடைந்து
தும்பி இனங்கள் அலமரல் வெளியிலும்
துடியன்ன இமைகள் காட்டுதி நீயோ?
மென்மயிர் இறையின் நெகிழ்வளை காட்டி
இறைஞ்சும் அவிர் ஒலி பரப்புதி என்னை?
ஓங்கல் இடையும் நெறித்தே நோக்கி
விடியல் காட்டி விரையும் மன் அறிதி.
பசலை நோன்றனை பூவின் மஞ்சம்
அல்ல இஃது கடுவாய் முள்ளின் குடுமியென
கணந்தொறும் கணந்தொறும் கரைதல் ஆற்றாய்.
தீர்க நின் படரே. கொம்பொலி கேட்கும்
அவன் கால் சுவட்டின் இன்னொலி இழைத்து.
=================================================