வீரவணக்கம்

இரத்தமும் கொதிக்குது
இதயமும் வெடிக்குது
கதறிடும் தளிர்கண்டு
கண்ணீரில் நம்நாடு !
ஈரமிலா நெஞ்சமடா
ஈனப்பிறவி நீயடா
கொலைவெறி ஏனடா
கொடும்பாவி நீயடா !
எங்களைக் காத்தவர்
இன்னுயிர் நீத்தவர்
தேசநலன் நினைத்தவர்
தாக்குதலில் மாண்டவர் !
இந்தியராய் இணைந்து
எதிரிகளை வெல்வோம்
உயிர்தந்த தியாகிகளை
உள்ளவரை மறவோம் !
கண்ணீர் அஞ்சலியுடன்
வீரவணக்கம் செலுத்துகிறேன் !
பழனி குமார்
16.02.2019