வீரவணக்கம்
இறந்துபோன ஒவ்வொன்றும்
உயிர் தானா?
இல்லை
பயங்கரவாதிகளின் இதயமா?
என்ன தவருசெய்தார்களென்று
யாருக்கும் தெரியவில்லை!
ஆம்
குடும்பத்தை விட்டுவிட்டு-தன்
நாட்டைக் காக்க நினைத்தார்களே
அவர்கள் செய்தது தவறுதான்!
இறந்துபோன உயிரெல்லாம்
இறக்கும் தருவாயில் நினைத்தது
என்னவோ?
தாய்தந்தையை நினைத்தார்களோ?
மனைவியை நினைத்தார்களோ?
மகன்மகளை நினைத்தார்களோ?
யார் அறிவார் அதையெல்லாம்...
உயிர்போன உடலென்று இல்லாமல்
தீயீல் வெந்து உருகிபோன உடலோடு
வாழ்க்கையை சிதைத்துவிட்டு கிடக்கும்
நாட்டின் இரத்த ஓட்டம்...
இரத்த ஓட்டம் நின்றுவிட்டால்
உடலிற்கு என்ன வேலை?
உயிர் பறிப்போன உடலாய்
நிற்க வேண்டியதுதான்!
பாலையிலும் பாறையிலும்
பனியிலும் கடலிலும்
உறைந்த இதயத்தை சுமந்து
எல்லையை காத்தவன்
இப்பொழுது
வெளியேறிய இரத்தம் உறைந்துகிடக்க
அவனது குடும்பம் கண்ணீரில் உருக
நாட்டின் கண்களும் அருவியாய் பெருக
நம் நாட்டிற்கு உயிர்தியாகம் செய்த
இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கங்கள்!!!