பிறகு

பிறகு?

தேசத்தின்
உயிர்நாடி
வீரர்கள்.

உயிர்தியாகம்
செய்த
உயிர்நாடிகளுக்கு
தேசமே
கண்ணீர் மாலைகளை
உதிர்க்கிறது.

அரசியல்
பிழைகளால்
பிள்ளைகளை
நாளும் இழக்கும்
பெற்றோர்கள்
இன்னமும்
பிள்ளைகளை
இழக்கத் தயாராக
இருப்பது
தான்
இந்தியாவின்
ஆன்மாவா?

குளிர் பிரதேசத்தின்
குழிகளை
குண்டுகளால்
மட்டும்
நிரப்பி
அமைதி காண
இயலாது.

அயலார்
தேசமே
பயங்கரவாதங்களுக்கும்
தீவிரவாதங்களுக்கும்
முக்காலிட்டு
முடங்கிக்
கிடக்கிறபோது
முற்றுப்புள்ளி
கேள்விக்குறியே.

அண்ணல்
போன்ற
ஆளுமைகள்
போற்றிய
நெறிகளை
காற்றில்
பறக்கவிட்டதால்
இன்று
தேசமே
காற்றாடியாகிவிட்டது.

தேர்தல் திருவிழாவில்
தொலைந்துபோனார்கள்
எம்
இராணுவ தோழர்கள்.

அரசியல்
என்பது
படியா
பிடியா?

அவரவரை
அவரவர்
நோக்கில்
செயல்படாமல்
பார்த்துக் கொள்வதா
ஆளுமை?

அப்பிரதேச
மக்களுக்கு
சலுகைகள்
வழங்கி
சமாதானபட்டுக்
கொள்வதா
தேசியம்?

பாவம்
அந்த மக்கள்...
எத்திசை
நோக்கினும்
பல்முனை தாக்குதல்கள்.
மரண ஓலங்கள்.
ஏரிகளில்
மிதக்கின்றன
பிணங்கள்
பூங்காக்கள்
மீது
தெளிக்கப்படுகின்றன
இரத்தத்துளிகள்.

இந்த
பயங்கரவாதங்களை
வேரறுக்க என்ன
செய்யப்போகிறோம்?

ஓரிரு
மாதங்களில்
ஓய்ந்துவிடும்
தேர்தல்குரல்களும்
கூச்சல்களும்.

பிறகு
பிறகு?

-சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (16-Feb-19, 7:54 am)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : piraku
பார்வை : 66

மேலே