புன்னகை மௌனஓவியம்

வானத்தில் நீலம்
காற்றில் கவிதை
பறவையின் சிறகு !

ஆற்றினில் நீரோட்டம்
அலைகளில் கீதம்
படகு ஓர் பாடகன் !

தோட்டத்தில் மலர்
தென்றலின் வருகை
காதலில் ஓர் தழுவல் !

பூவினில் புன்னகைராகம்
புன்னகை மௌனஓவியம்
காலையில் ஓர் ஆலய தரிசனம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Feb-19, 10:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 118

மேலே